தர்மபுரி சிப்கார்ட் தொழில்பேட்டை தொடங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
சாலைக்கான வழி அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்படும். பின்னர், முதலமைச்சர் இந்தத் தொழில்பேட்டையை விரைவில் தொடங்கிவைப்பார் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.
மேலும், “மயிலாடுதுறையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய வகையில் கரும்பு இல்லாத காரணமாக செயல்படாமல் உள்ளது.
சர்க்கரை ஆலை செயல்பட ஒரு லட்சம் டன் கரும்பு தேவைப்படுகிறது. எனவே வேளாண் மக்களிடமும், தமிழ்நாடு முதலமைச்சரிடமும் இந்த பிரச்னை தொடர்பாக பேசி மயிலாடுதுறை கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க...பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்