ETV Bharat / city

புற்றுநோய்ப்பாதிப்பு என்பது நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 3, 2022, 6:12 PM IST

சென்னை: சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அண்மை கதிர்வீச்சு கருவியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கதிர்வீச்சு சிகிச்சை கருவி மக்களின் பயன்பாட்டிற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல், ரோபோட்டிக் மூலம் 56 சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், பன்னோக்கு மருத்துவமனை என்ற பெயருக்கு ஏற்ப புதிய சிகிச்சைகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த மருத்துவமனையில் ஐசியு, வென்டிலேட்டர் வசதி, டயாலிசிஸ் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் அதிகரிக்கப்பட்டு, இந்தாண்டில் மட்டும் இதுவரை 10 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

ஓமந்தூரார் கட்டடம் தலைமைச்செயலகமாக தான் கட்டப்பட்டது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் இதனை மருத்துவமனையாக மாற்றினார்கள். இருந்தபோதும் முதலமைச்சர், இதனை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது உள்ள சூழ்நிலையில், உலகம் முழுவதும் புற்றுநோய்ப்பாதிப்பு என்பது மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாக நமக்கு உள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தேவையான அனைத்து உபகரணங்களையும் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.

சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அண்மை கதிர்வீச்சு கருவியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், 'கருப்பை மற்றும் வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை சென்னை மாநகரில் முதற்கட்டமாக 90 ஆயிரம் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட இங்க் பேனா... மாணவர்கள் உற்சாகம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.