ETV Bharat / city

அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மதிப்பை வெளியிட தயாரா... அமைச்சர் மா சுப்பிரமணியன் கேள்வி - ஆந்திராவில் இருந்தே அதிகம் கடத்தி வருவதை உறுதி

அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மதிப்பை புள்ளி விவரத்தோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharatஜெயக்குமாரின் பேச்சு அநாகரிகமானது அமைச்சர் மா சுப்ரமணியம்

author img

By

Published : Aug 16, 2022, 11:32 AM IST

Updated : Aug 16, 2022, 11:41 AM IST

சென்னை:சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரத்தில் 20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் கட்டுமானபணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சென்னையில் பருவ மழையின் போது கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு போல, இந்த ஆண்டு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வளசரவாக்கம் பகுதியில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் வீடுகளுக்குள் மழை நீர் சூழும் ஆபத்தான நிலை உள்ளது. இதன் காரணமாக வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியாக அடையாற்றை இணைக்கும் கால்வாய் ஒன்று இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பாக கட்டும் பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மூன்று துறைகள் இணைந்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடத்தி வருவதாக கூறினார். மேலும் சென்னையில் உள்ள நீர் நிலைகள் மற்றும் 16 கால்வாய்களை தூர்வாரும் பணி 200 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்பொழுது நடைபெற்று வருகிறது என்றார்.

இதனையடுத்து 1050 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் எல்லாம் நிறைவு பெற்றால் சென்னையில் பருவமழைக்கு முன்பே மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் கருத்துக்கு பதில் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஜெயகுமாரின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். கடந்த 9 ஆண்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தியவர்களில், எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று அவருக்கு தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சி அமைத்து கடந்த 15 மாதத்தில் கடந்த ஆட்சியை விட நாங்கள் அதிகமான வழக்கு பதிவு செய்து, கஞ்சா, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தான் வெளியிட்டதில் தவறு இருந்தால் அவரே அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தகவல் தெரிவிக்கட்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி 100% தடை செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிற்கு வரும் கஞ்சா குறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா,போன்ற மாநிலங்களில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் கடத்தி வருவதை உறுதி செய்து, ஆந்திராவிற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதனால் 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவித்தோம், உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரம் கோடி எனவும், இதுபோன்ற செயல் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதா? என சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Aug 16, 2022, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.