ETV Bharat / city

ஆவடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கே.என்.நேரு - ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு
author img

By

Published : May 7, 2022, 7:35 AM IST

சென்னை: தமிழ்நாடு பேரவையில் இன்று (மே 06) நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவடியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, ஒருவர் உயிரிழந்து சம்பவம் தொடர்பாக அரசு கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, விஞ்ஞானம் வளர்ந்து விட்ட காலத்தில் இப்படிப்பட்ட மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று அரசு கவனிக்க வேண்டும் என்றார். ஐஐடி போன்ற நிறுவனங்கள் இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கும் விதமாக பல அறிக்கைகள் கொடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி அரசு, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், கழிவு நீர் தொட்டியில் வேலை செய்யும் அப்பாவிகளுக்கு மட்டும் ஏன் விஞ்ஞானம் வளரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தனியார் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பணியாளர்கள் செல்லும்போது, மாநகராட்சியிடம் தகவல் தெரிவிப்பது இல்லை. அவ்வாறு, மாநகராட்சியில் உரிய இயந்திரங்கள் இருக்கும்போது, அவசரமாக தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பணி செய்கின்றனர். இதனால், இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், தனியாரிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.