மதுரை: கடந்த புதன்கிழமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது, "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்கக் கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு முறையான பதில் அளிக்காமல், சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள், மதுரையில் வெங்கடேசன் என்ற ஆளு இருக்கின்றார், அவரிடம் கேளுங்கள்" என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பொதுவெளியில், இதுபோல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இவ்வாறு நிகழாது
இது குறித்து ட்வீட் செய்துள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, "பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Save Life: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.5000 பரிசு