ETV Bharat / city

‘பருவமழைக்கான முன்னெச்சரிக்கைகள் துரிதமாக இருக்கும்’ - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - கனமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரவுள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 9:47 PM IST

சென்னை: விமான நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களர்களைச் சந்ததித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்குப் பருவ மழைக்காக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் அமைச்சர்களும் அனைத்துத் துறை செயலர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு துறையின் செயலாளரும் நேரடியாக பேச வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

முன்னதாக கடந்தமுறை, மழை பாதித்த இடங்களை கவனமாக வைத்து மீண்டும் அந்த இடத்தில் பாதிப்பு வராதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு பணிகள் செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களும் கிராமங்களிலும் பருவமழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்யர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசினுடைய வானிலை அறிக்கையும், தனியார் அறிக்கைகளையும் வைத்து, எதில் பாதிப்பு அதிகமாக இருக்குமென எந்த அறிக்கை சொல்கிறதோ? அதை எடுத்துக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக துரிதமாக இருக்கும்.

வர உள்ள பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் 1700-க்கும் மேற்பட்ட வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழைக்கு பின் பாதிப்புகள் வராத அளவுக்கு நூறு சதவீதம் அளவிற்கு அரசின் நடவடிக்கை இருக்கும். பேரிடர் மேலாண்மை நிதி பாதிக்கப்பப்ட்ட அந்தந்த துறைக்கு அனுப்பப்படும்” என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் பலத்த மழை... பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.