ETV Bharat / city

’திமுக பொதுக்குழுவில் பில்டப்’ - அமைச்சர் ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒவ்வொரு கட்சியும் தீர்மானங்களில் பில்டப் கொடுப்பது வழக்கம் தான் என்றும், அதுபோலவே திமுகவும் தங்களது பொதுக்குழுவில் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Sep 9, 2020, 6:34 PM IST

அதிமுக சார்பில் கொத்தவால் சாவடி துறைமுகம் பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் போடும் போது சில ’பில்டப்’ களை கொடுப்பது வழக்கம்தான். அதுபோலத்தான் திமுக பொதுக்குழுவிலும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம், எட்டு மாதங்களில் ஆட்சி மாறும் என்றும் கூறியிருக்கின்றனர்.

ஆனால், மக்களின் எண்ணம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதிமுக ஆட்சியே அமைய வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சி என்றால் நாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டலாம். செய்யும் எல்லாவற்றையும் குறை கூறக்கூடாது. நிதி, தன்னாட்சி குறித்து பேசக்கூடிய ஸ்டாலின், திமுக ஆட்சியின்போது எவ்வளவு நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றார்.

வாங்குகின்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துகின்ற மாநிலம் தமிழ்நாடு. எனவே ரிசர்வ் வங்கி எப்போதும் போல் நிதி வழங்க வேண்டும். அதையே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜக விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், தன் கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருப்பது இயல்புதான் என்றார்.

இதையும் படிங்க: திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.