ETV Bharat / city

இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன? - வருமானத்தை மீறி

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

இளங்கோவன்மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர்
author img

By

Published : Oct 23, 2021, 10:46 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக 36 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது.

சொத்துகளின் மதிப்பு

இதில் ரூபாய் 5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணி, ரூ. 25 கோடி மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தகம் முதலீடுகள், 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை இன்று தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு

இளங்கோவன் மற்றும் மகன் பிரவீன் குமார் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக 131 விழுக்காடு அளவுக்கு சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குபதிவு செய்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று அக்.22 ஆம் தேதி, சோதனையில் 29.77 லட்சம் பணம், 10 மதிப்புள்ள சொகுசு கார்கள், இரண்டு வால்வோ பேருந்துகள், 3 கணினி ஹார்டிஸ்கள், 21.2 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புதொகை 68 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கைத்தறி உள்ளிட்ட துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.