சென்னை: மாநகராட்சிப் பகுதியில் 258 கி.மீ., சாலை நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது. அதில் ஜி.எஸ்.டி சாலையில் கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகில் அணுகு சாலையை செப்பனிடும் பணிகள் ரூ. 171.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சாலைகளை மில்லிங் செய்து குடியிருப்புப் பகுதிகளில் சாலையின் உயரம் அதிகரிக்காமல் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பது குறித்தும், சாலைப் பணிகள் தரத்துடன் செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் அமைச்சர் வேலு நேற்று (ஜனவரி 25) இரவு 11.30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சாலை 40 மி.மீ அளவுக்கு தோண்டப்பட்டு (மில்லிங்) உள்ளதா எனவும், புதியதாகப் போடப்படும் சாலையின் உயரம் 40 மி.மீ அளவுக்கு கணத்துடன் போடப்பட்டுள்ளதா எனவும், அளவீடு கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், போடப்பட்டுள்ள சாலையினை துளையிட்டு, மதிப்பீட்டில் உள்ளபடி அடர்த்தி, தார் மற்றும் உறுதித் தன்மை உள்ளதா என பரிசோதித்தார்.
இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் திரு.சந்திரசேகர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 73ஆவது குடியரசு தினம்: உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி