சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் பெய்த பெருமழையால் பயிர்கள் சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி நாசமாகின.
இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினை (Minister Committee) அமைத்து மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
குழுவின் அறிக்கை நாளை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. பயிர் சேதங்களுக்கு (Crop Damage) நிவாரண உதவியை ஸ்டாலின் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி