ETV Bharat / city

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 90% சீரமைப்புப் பணிகள் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு - Former US President Bill Clinton

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 90% புனரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு
author img

By

Published : Sep 2, 2022, 10:47 PM IST

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புனரமைக்கும் பணிகளை இன்று (செப்.2) பார்வையிட்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியளார்களிடம் பேசுகையில், 'ஆசியாவின் 2ஆவது மிகப்பெரிய நூலகமான, சென்னையில் உள்ள கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மறைந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இந்த நூலகத்தை பார்வையிட்டபோது “இதுபோன்று பரந்து விரிந்த மிக அதிகமான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை, வேறு எங்கும் கண்டதில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதிலமடைந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கில், ரூ.32.49 கோடி ஒதுக்கீடு செய்து 25.10.2021அன்று அரசாணை வெளியிடப்பட்டார். அதில் சிவில் பணிக்காக ரூ.18.26 கோடியும், மின் பணிக்காக ரூ.14.23 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்பணிகள் 30.9.2022அன்று முடிவடைய வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்நூலகம் 8 தளங்களைக்கொண்டதால் ஒவ்வொரு தளங்களாகப்பார்த்து, எங்கெல்லாம் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது; எங்கெல்லாம் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தற்போது புதியதாக 30,160 சதுர அடி அளவிற்கு தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.

புதியதாக எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அது பழுடைந்தநிலையில் தற்போது புதியதாக அதிக மின்சக்தி கொண்ட ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நூலகத்தில் ஓலைச்சுவடிக்கென 7ஆவது தளம் உள்ளது. அதில் உள்ள ஓலைச்சுவடிகளை தற்போதுள்ள தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாத்திடவும், மக்கள் பார்வைக்குச் சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 90% பணிகள் முடிவடைந்த நிலையில் சுத்தம், பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்' என்று தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசகம், முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வு) செல்வகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.