ETV Bharat / city

மக்கள் பாதுகாப்பு பணியில் போதுமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-  தமிழ்நாடு காவல்துறை - Chennai High court

சென்னை: மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பு பணியில் போதுமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-  தமிழ்நாடு காவல்துறை

author img

By

Published : Jul 22, 2020, 5:30 AM IST

கரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு மே மாதம் அனுமதி அளித்தது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மதுபான கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை குறைக்க வேண்டும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலை தடுக்கவும், கரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் தலைவர் பன்னீர் செல்வம் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சார்பில் உதவி காவல்துறை துணை தலைவர் இ.டி.சாம்சனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான போதிய காவலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அது தவிர ரேசன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடமாட்டம், கரோனாவால் பாதிக்கப்பட்ட கடடுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைபடுத்தப்பட்ட நபர்கள், சோதனை சாவடி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளிலும் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை வடக்கு மண்டல டாஸ்மாக் பணிக்கு 583 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 749 பேரும், மத்திய மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 363 பேரும் , பிற பணிக்கு 5 ஆயிரத்து 295 பேரும், மேற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 887 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 954 பேரும், தெற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 764 பேரும், பிற பணிக்கு 11 ஆயிரத்து 876 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 410 பேரும், பிற பாதுகாப்பு பணிகளுக்கு 10 ஆயிரத்து 545 பேரும் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பிற பணிகளுக்கு 43 ஆயிரத்து 119 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரத்து 7 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுதும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை சேர்ந்த 9 ஆயிரத்து 326 ஆண்களும், 2 ஆயிரத்து 59 பெண்களும் என 11 ஆயிரத்து 385 பேர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.