ETV Bharat / city

தாது மணல் கொள்ளை வழக்கு: அரசு கண்காணித்து பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Nov 13, 2021, 7:11 PM IST

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் தாக்கல்செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்துவருகிறது.

கடலோர மாவட்டங்களிலிருந்து தாது மணலை எடுப்பதற்குத் தடைவிதித்தும், ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி. சுரேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அதன்படி வழக்கறிஞர் வி. சுரேஷும் தனது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அந்த அறிக்கையில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதின் காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் சுரேஷின் அறிக்கையை ஆய்வுசெய்து பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு விவி மினரல்ஸ் நிறுவனம் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தாது மணல் கொள்ளை குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.