கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சரக்கு ரயில் மூலம் அத்தியாவசியப் பொருள்களான உணவு தானியங்கள், மளிகை சாமான்கள், பிஸ்கெட்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், நிறுவனங்களின் பார்சல் உள்ளிட்டவற்றுடன் பால், காய்கறிகள் போன்ற எளிதில் கெட்டுப் போகும் தன்மை கொண்ட பொருள்களும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று சேலம் ரயில் நிலையத்திலிருந்து நாகாலாந்து மாநிலம் திமாபுருக்கு செல்லும் சிறப்பு சரக்கு ரயிலில் 115 டன் (1,115 லிட்டர் டெட்ரா பாக்கெட்) பால் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் 8 டன் மருந்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இவை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை பிரிவுக்கு கொண்டுச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு 8 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பயன்பாடு இல்லாமல் இருந்த ரயில்வே சரக்கு போக்குவரத்து சேவை, சேலம் கோட்ட அதிகாரிகளின் நடவடிக்கையால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
இதையும் படிங்க:
கொரோனா வைரஸ் பீதி: உயிர் காக்கும் மருந்து குறித்து மருத்துவர் விளக்கம்!