இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்குதான் கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் கரோனா தொற்று பற்றி அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி உரிய சிகிச்சை பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
துபாயிலிருந்து கடந்த மார்ச் 17ஆம் தேதி விமானம் மூலம் மதுரையில் வந்து இறங்கிய 43 வயது நபருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது மார்ச் 22இல் (நேற்று) கண்டறியப்பட்டது.
இந்த நபர் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் திருநெல்வேலி அருகேயுள்ள ராதாபுரம் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை மேற்கொள்ள சென்றபோது அவருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார துணை இயக்குநர்கள், இவர் குறித்த தகவல்கள், பயண பின்னணி குறிப்புகள் பற்றி எதுவும் வெளிப்படுத்தவில்லை.
முன்னதாக, மதுரை வந்த இந்த நபர் அங்கிருந்த சகபயணியுடன் காரில் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ராதாபுரம் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு தனது நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர், தனிமைப்படுத்திக்கொண்டாகவும் தெரிகிறது.
தற்போது கரோனா பாதிப்பு நபரின் நண்பர், அவருடன் பயனித்த சகபயணி என இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'டெல்லியிலிருந்து வந்தவருக்கு கரோனா தொற்றிய காரணம் தெரியவில்லை' - விஜய பாஸ்கர்