ETV Bharat / city

ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி! - சிறப்பு ரயில்கள்

சென்னை: சிறப்பு ரயில்கள் மூலம் பிகார், உத்தரப் பிரதேசம் செல்வதற்கு வெளி மாநில தொழிலாளர்கள் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

workers
workers
author img

By

Published : May 14, 2020, 7:42 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்கள் அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பகுதி பகுதியாக சொந்த ஊருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை அறிந்த வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். வலைதளத்தில் பதிவு செய்து பயணம் உறுதி செய்யப்படாத தொழிலாளர்களும் அங்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையம் மற்றும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பாக உடைமைகள், கைக்குழந்தைகளுடன் பலர் நின்று கொண்டிருந்தனர். ஆனால், மொழி பிரச்னையால் நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் காவல் துறையினர் சிரமம் அடைந்தனர். ஒரு வழியாக இறுதியில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சொந்த ஊர் செல்ல ஆவலுடன் வந்த தொழிலாளர்கள் பலர் சோகத்துடன் முகாமுக்கு திரும்பினர்.

ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்
ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்

இதனிடையே, ரயில் நிலையத்திற்கு இன்று வந்திருந்த வெளி மாநில தொழிலாளர்கள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைவரும் அங்கு கூட்டமாகவும், நெருக்கமாகவும் அமர்ந்திருந்தது கரோனா பரவலை எளிதாக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இனிமேலாவது வெளி மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அதிகப்படியான கவனம் செலுத்தி, அவர்கள் பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி!

இதையும் படிங்க: வழிவிடுங்க பாஸ் நாங்க ஊருக்கு போகனும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.