ETV Bharat / city

உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிகைக்களை அரசுகள் எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - உருமாற்றம் பெற்ற கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை

சென்னை: உருமாற்றம் பெற்ற கரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Feb 23, 2021, 10:05 PM IST

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், உருமாற்றம் பெற்ற கரோனா பரவலைத் தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், புதிய கரோனா தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்குள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசு தரப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இவற்றைப் பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, உருமாற்றம் பெற்ற கரோனாவின் தாக்கம் ஆந்திராவின் அமராவதி மற்றும் மகாராஷ்டிராவின் அகோலா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது நம் எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு குறித்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வரும் நிலையில், புதிய உத்தரவுகளை பிறப்பித்து அரசுக்கு மேலும் சுமை ஏற்ற விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுக்கட்ட விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: புயல் நிவாரண நிதி மோசடி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.