ETV Bharat / city

தரமற்ற பொங்கல் பரிசுகள்: அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சொன்ன உயர் நீதிமன்றம்

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேடில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
author img

By

Published : Apr 6, 2022, 10:57 PM IST

சென்னை: திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இ- டெண்டரில் முறைகேடு நடைபெற்றும் உள்ளது. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்டப் பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகளுடனும் காணப்பட்டன.

தரமற்ற உணவுப்பொருட்களைத் தடுக்காத அமைச்சர்கள்: இதுபோன்ற தரமற்ற பொருட்கள் விநியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தனது குற்றச்சாட்டு புகார் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தரமற்ற பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளி வைப்பு: எனவே, புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.