ETV Bharat / city

ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்தான் அகற்றுவீர்களா? - உயர்நீதிமன்றம் கேள்வி - ஆறுகளை பலப்படுத்த தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி

ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது? ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் நீதிமன்றம் உத்தரவுக்கு பின்புதான் அகற்றுவீர்களா? என ஆரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 11, 2022, 3:07 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணியாற்றில் கும்மமுனிமங்கலம் முதல் இலட்சுமிபுரம் அணைக்கட்டு வரையான இரு கரைகளிலும் சில தனியார் நிறுவனங்கள் வணிக வளாகங்களையும், வீடுகளையும் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனிடையே ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்துவதற்கு அரசு ஒதுக்கிய நிதியில், மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் ஆக்கிரமிப்பை அகற்றாமலே இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து புகார் அளித்தும் அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என பொன்னேரியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், முறையான நோட்டீஸ் வழங்கப்பட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் என தெரிந்தால் அப்புறப்படுத்த இந்த அரசு தயங்குவதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் நீதிமன்றம் உத்தரவுக்கு பின்பு தான் அகற்றுவீர்களா? நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி அலுவலர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்புகள் என்பதே இருக்காது. புகார் அளித்தவரும் இறந்து விடுவார். அலுவலர்களும் மறந்து விடுவார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகள் மட்டும் தொடரும் என வேதனை தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஆக.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: காலிக் குடங்களுடன் அரசு பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.