ETV Bharat / city

’எம்ஜிஆர் ஆட்சி’ - காட்சியா? காட்சிப்பிழையா?

சென்னை: விஜயகாந்த், பாஜக, கமல் ஹாசன், ரஜினி... ஆட்சிக்கு வர விரும்புவோர் அனைவரும் வாய் திறக்கும் மூன்றெழுத்து ’எம்ஜிஆர்’. உண்மையிலேயே எம்ஜிஆரின் ஆட்சி பொற்காலமா? அல்லது இவர்களே உருவாக்கும் ஒரு பிம்பமா?

government
government
author img

By

Published : Dec 24, 2020, 3:08 PM IST

’நான் கருப்பு எம்ஜிஆர், எம்ஜிஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும், எம்ஜிஆரின் நீட்சி நான்...’ தமிழக அரசியலில் கால் பதிக்கும் ஒவ்வொரு புதியவரும் சொல்லும் வசனங்கள் இவை. நேற்றைய விஜயகாந்த் தொடங்கி இன்றைய கமல், ரஜினி வரை, எம்ஜிஆரையே நல்லாட்சிக்கான ரோல் மாடலாக காட்டி வருகின்றனர். பாஜகவோ இன்னும் ஒரு படி மேலே போய், சாவர்க்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, மோடி இருந்த இடத்தில், எம்ஜிஆரையும் சேர்த்து உரிமை கொண்டாடி வருகிறது. இவை அனைத்திற்கும் அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு புயல் கிளம்பினாலும், அது அன்றைய தொலைக்காட்சி செய்திகளின் இடைவேளையோடு வலுவிழந்து விடுகிறது.

கடந்த காலங்களில் காமராஜர் ஆட்சி என்று ஒலித்த குரல், தற்போது ராமாவரம் தோட்டத்து நாயகன் பக்கம் திரும்பியிருப்பதற்கு, புதிய தலைவர்கள் தரப்பில் ஞாயமும் தெரிவிக்கப்படுகிறது. ஏழைப்பங்காளன், மீனவ நண்பன், சத்துணவு திட்டம் தந்த கோமான் என்ற புகழ் அடைமொழிகளை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஆனாலும், இன்றைய தலைமுறைக்கு கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா அளவிற்கு அறிமுகமானவராக எம்ஜிஆர் இருக்கிறாரா? இறந்து இன்றோடு 33 ஆண்டுகள் கழிந்த பின்னும் அரசியல் ஒலிப்பெருக்கிகள் அவர் பெயரையே உச்சரிக்க காரணமென்ன? உண்மையிலேயே எம்ஜிஆர் ஆட்சி பொற்கால ஆட்சியா?

நான் எம்ஜிஆரின் நீட்சி - கமல் ஹாசன்
நான் எம்ஜிஆரின் நீட்சி - கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், "நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன், தற்போது உள்ள பல அமைச்சர்கள் எம்ஜிஆரை பார்த்திருக்கக்கூட மாட்டார்கள், நான் எம்ஜிஆரின் நீட்சி” என்றும், விரைவில் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில், "என்னால் அடுத்த எம்ஜிஆராக மாற முடியாது, ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை வழங்க முடியும்" என்று, தேர்தல் நெருங்கும் நேரத்தில் எம்ஜிஆரை மேடையேற்றுகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றே அறிவித்துக் கொண்டார்.

நான் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் - ரஜினி
நான் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் - ரஜினி

இப்படி எங்கு திரும்பினும் எம்ஜிஆர் புராணங்கள் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், அவர் தமிழகத்தை ஆண்ட 13 ஆண்டுகளில் அப்படி என்ன நல்லாட்சியை தந்து விட்டார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி, கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து, முல்லைப் பெரியாற்றில் நமக்கான உரிமையை கேரளாவிடம் அள்ளிக்கொடுத்தது யார்? மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) தானே என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும், மனிதரில் புனிதர், வள்ளல் என்ற அடைமொழிக்கும் எம்ஜிஆருக்கு சம்பந்தமே இல்லை என்னும் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், எம்ஜிஆர் ஆட்சி ஓர் போலீஸ் ஆட்சி என்கிறார்.

’எம்ஜிஆர் ஆட்சி ஓர் போலீஸ் ஆட்சி'
’எம்ஜிஆர் ஆட்சி ஓர் போலீஸ் ஆட்சி'

” போராட்டங்களில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 19 விவசாயிகளை கொன்றது, மெரினா துப்பாக்கிச்சூட்டில் 14 மீனவர்களை கொன்றது, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்த இளைஞர்கள் 25 பேரை நக்சலைட்டுகள் என்று புனைந்து சுட்டுத்தள்ளியது, இட ஒதுக்கீடு கோரிய 21 வன்னியர் இன மக்களை படுகொலை செய்தது, மாணவர்கள் மீதான கொடும் அடக்குமுறை. இதுமட்டுமா? சாராய சாம்ராஜ்யத்தை கட்டமைத்து, கட்சியினரை கல்லா கட்ட வைத்தது, பால்டிகா கப்பல் நிலக்கரி ஊழல் என பல ஊழல்களுக்கும் பெயர்போனதுதான் மாற்று தேடும் இவர்களின் எம்ஜிஆர் ஆட்சி “ என்கிறார் அதிரடியாக.

’பல ஊழல்களுக்கு பெயர்போனதுதான் எம்ஜிஆர் ஆட்சி’

நம்மிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், “ திராவிடக் கொள்கைகளில் முதல் முதலில் ஓட்டை போட்டது எம்ஜிஆர் தான். திரைப்படம் மூலம் எம்ஜிஆர் என்ற பிம்பம் உருவானது. அவரது ஆட்சியில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் என்பது மிகக்குறைவு. சத்துணவு திட்டம் உள்ளிட்ட சிலவற்றை தவிர தமிழகத்தின் கட்டமைப்பிற்கு எம்ஜிஆரின் பங்களிப்பே இல்லை. ஆனால், மக்கள் மனதில் அவர் ஒரு நல்ல மனிதர், வள்ளல், அனைவரையும் மதிக்கக்கூடியவர் போன்ற பண்புகள் அவர் மீதி ஏற்றப்பட்டன. ரஜினிகாந்த் சிஸ்டத்தை மாற்ற போகிறேன் என்கிறார், ஆனால் அவர் சொல்லும் எம்ஜிஆரே எந்த சிஸ்டத்தையும் மாற்றவில்லை. அதே போல் கமல் ஹாசனின் மய்யம் கொள்கைக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? “ என்று கேள்வி எழுப்பினார்.

திராவிடக் கொள்கையில் முதல் ஓட்டையை போட்டது எம்ஜிஆர் தான்!

கொள்கைகளை சொல்லாமல் எம்ஜிஆர் என்னும் பிம்பத்தின் மூலம் மக்களை கவர முடியும் என்று, கமல் ரஜினி உள்ளிட்டோர் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், ஜெயலலிதாவே எம்ஜிஆர் ஆட்சியை முன்னிறுத்தவில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அவர் தன்னை முன்னிலை படுத்தியே வாக்குகள் கேட்டார். எம்ஜிஆர் ஆட்சி செய்யும் போது அவரது ஆட்சியை பாராட்டாத ரஜினி, கமல் ஆகியோர் தற்போது எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்று பேசுவது, மக்களை ஏமாற்றும் வேலை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் பேசுங்க: 3ஆவது முறையும் ஆட்சி அமைப்போம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.