சென்னையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சிறிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வியாபாரிகள் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளனர்.
இதனால் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வியாபாரிகளிடம் காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் பொருட்டாக இன்று(ஜூலை 14) சைதாப்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் கடை வியாபாரிகளிடம் அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா தொற்றுப் பரவாமல் தடுப்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளை காவல் துறையினர் வழங்கினர்.
பின்னர் கலந்தாய்வின் முடிவில் கடை வியாபாரிகள் கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹஜ் இல்லத்திற்கு மாற்றப்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள்