ETV Bharat / city

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தயார்நிலை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2021-க்கான தயார்நிலை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

meeting on tn local body elections
meeting on tn local body elections
author img

By

Published : Oct 1, 2021, 5:31 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள 37 மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2021-க்கான தயார்நிலை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்காணொலி ஆய்வுக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு கீழ்க்கண்டவை குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

  • வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் கோவிட் -19 தொற்று பரவலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்.
  • அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதிசெய்தல்
  • வாக்குச்சாவடிச் சீட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தல்
  • வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுகை அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல்
  • மண்டல அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல் - மாதிரி பயணத்திட்டம்
  • மாதிரி நன்னடத்தை விதிகளைத் தவறாது கடைப்பிடித்தல் - விதிமீறல் இனங்கள் குறித்த அறிக்கை
  • பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம், மதுபானம் குறித்த அறிக்கை
  • பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், காணொலி பதிவுகள், தேர்தல் நுண்மேற்பார்வையாளர் பணிகள் குறித்த விவரங்கள்.
  • வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணுகை மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்
  • வாக்கு எண்ணுகை மையத்தில் சிசிடிவி அமைத்தல்
  • வாக்கு எண்ணுகை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சிசிடிவி அமைத்தல்

இதையும் படிங்க: இரவில் வெட்டியான் - பகலில் ஆசிரியர்: கடுமையாக உழைக்கும் பட்டதாரி இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.