இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்தச் சோக சம்பவம்தான், இரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.
அந்தகார இருள் விலகி, ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசு பெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள்.
வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களுக்குத் தாங்குதல் தரக்கூடிய மன வலிமையையும், உறுதியையும் தரக்கூடிய வகையில், உயிர்த்து எழுதல் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்துகின்ற ஈஸ்டர் திருநாள் மலர்ந்துள்ளது.
மேலும், மக்களிடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட வேண்டும்’ என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.