ETV Bharat / city

'நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான கேள்வி?' - அமைச்சர் பதிலளிக்க மறுப்பு! - Entrepreneur Discussion

சென்னை: ஆழ்வார்பேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பெரு நிறுவனங்கள் தொடங்க கையூட்டு பெறப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பதிலளிக்க மறுத்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்
author img

By

Published : Sep 27, 2019, 8:37 AM IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பாகச் செயல்பட்ட தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட ஆட்டோமொபைல் துறை கொள்கை, தொழில்நுட்பக் கொள்கை, தொழில் முனைவோர் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளைப் பட்டியலிட்டார்.

மேலும், மாநிலத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மின்சார வாகன கொள்கையையும், விண்வெளி கொள்கையையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இங்குத் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவதாகவும், வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் 8,805 கோடி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் உள்ளது என்றும் கூறினார்.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும், மின்சாரம் தடையில்லாமல் உள்ள மாநிலமாகவும் நம் மாநிலம் உள்ளது என்றும், உலகளவில் தமிழர்கள் பெரிய இடங்களில் உள்ளனர் என்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.

’யாதும் ஊரே’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க, ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் தலைமையில் தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தனித்தனி நாடுகளுக்கு என்று தனி அமர்வு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆட்டோ மொபைல் துறையில் முதல் பத்து இடங்களில் தமிழ்நாடு உள்ளது. இந்த துறை முன்னேற்றம் பெற மத்திய அரசுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைவு தான்" என்றார்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேட்டி

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசன்ட் நிறுவனம் தமிழ்நாடு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

பருவமழை பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது!

Intro:Body:சென்னை ஆழ்வார்பட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பாக செயல்பட்ட தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தொழில் வளர்ச்சிக்காக தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட ஆட்டோமொபைல் துறை கொள்கை, தொழில்நுட்பத்துறை கொள்கை, தொழில் முனைவோர் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை பட்டியலிட்டார். தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மின்சார வாகன கொள்கை மற்றும் aerospace கொள்கையை அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவது குறித்து அவர் பேசினார். வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் 8805-கோடி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தமிழகம் முன்னேற்றப்பாதையில் உள்ளது எனவும் கூறினார். தொழில் தொடங்க உகந்த மாநிலமாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும், மின்சாரம் தடையில்லாமல் உள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. நாளுக்கு நாள் தமிழகம் தொழில் துறையில் வளர்ந்து வருகிறது, உலகளவில் தமிழர்கள் பெரிய இடங்களில் உள்ளனர், தமிழக இளைஞர்கள் நிலையை மாற்ற வேண்டும் வேலை வாய்ப்பை உருவாக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம் என்றார். யாதும்ஊரே திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தனித்தனி நாடுகளுக்கு என்று தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"ஆட்டோ மொபைல் துறையில் முதல் பத்து இடங்களில் தமிழகம் உள்ளது, இந்த துறை முன்னேற்றம் பெற மத்திய அரசுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைவு தான்" என்றார். அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசன்ட் நிறுவனம் தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.