சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் குரோம்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி செயளாலர் கே. பாலகிருஷ்ணன் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இதுவரை பேனர் விழுந்து விபத்தில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவினை அரசு அலுவலர்கள் முறைபடி செயல்படுத்தியிருந்தால் இந்த சம்பவங்கள் நடந்திருக்காது.
சுபஸ்ரீ உயிரிழந்து ஒரு வாரம் ஆகியும் சம்மந்தப்பட்டவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்திவருகிறார்கள். அவரைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அவர் என்ன காஷ்மீரில் போய் ஒளிந்து கொண்டிருக்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எந்த விழாவிற்க்கும் பேனர்கள் வைப்பதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு கூடுதல் கவனத்தோடு இருக்கிறோம். அதனால் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த ஒரு பேனரும் வைக்கக் கூடாது என்று பகிரங்கமாக எங்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொண்டதாக தெரிவித்த அவர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கபட்ட இந்தக் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்க
சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்!
சுபஸ்ரீ குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு