சென்னை: தமிழ்நாடு அரசு முன்னதாக நரிக்குறவர் நல வாரியம், சீர் மரபினர் நல வாரியங்கள் மூலம் திருமண உதவித்தொகையாக ஆண், பெண் இருபாலருக்கும் ரூ. 2000 வழங்கிவந்தது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்குமாறு பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. அதனடிப்படையில், இந்தத்தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் நரிக்குறவர், சீர் மரபினர்நல வாரியங்களில் வழங்கப்படும் திருமண உதவி தொகை ஆண்களுக்கு 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பில் குடும்பத்தலைவிக்கு ரூ.1,000?