ETV Bharat / city

தொடரும் மலக்குழி மரணங்கள் - மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

கழிவு நீர் அடைப்பு நீக்குவதற்காக மனிதர்களை உள்ளே இறக்குவதை நிறுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருக்கிறது. ஆனால் இன்றளவும் செயல்படுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடரும் மலக்குழி மரணங்கள் - மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
தொடரும் மலக்குழி மரணங்கள் - மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
author img

By

Published : Jul 18, 2022, 8:26 PM IST

சென்னை: மலக்குழி மரணங்கள் குறித்தும், மாதவரம் மற்றும் பெருங்குடியில் நடந்த மலக்குழி மரணங்கள் குறித்தும் தேசிய அளவிலான மனித உரிமை அமைப்புகளில் கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அ. மார்ஸ், "மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆனால், அதற்கான இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரியாக சென்று சேருவதில்லை. சமீபத்தில் மாதவரம் பகுதியில் இரண்டு நபர்களும், பெருங்குடி பகுதியில் இரண்டு நபர்களும் கழிவு அடைப்பை நீக்குவதற்காக உள்ளே சென்று விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.

மாதவரம் பகுதியில் இருந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் பெருங்குடியில் இறந்த இரண்டு நபர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட பொழுதும் அவர்கள் சரிவர எங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

பெருங்குடியில் இறந்த நபர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் கொண்டு வந்து தனியார் நிறுவனத்தில் கழிவுநீரை அகற்றுவதற்காக உள்ளே இறங்கி இறந்துள்ளனர். அந்த தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. எனவே, அந்த நீதிமன்றத்தில் எப்பொழுது தீர்வு வரும் என்று தெரியவில்லை. இதுவரை அந்த குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் அரசு சார்பில் சென்று சேரவில்லை.

2013 முன்பே மனிதர்களை மலக்குழியில் இறக்கி சுத்தம் செய்வதை தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தேவையற்ற செயலாகும். மற்ற நாடுகளிலும் இதுபோன்று யாரும் செய்வதில்லை. இதற்கு பல்வேறு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி கழிவு அடைப்பை நீக்குவதற்கு உள்ளே இறங்கும் நபர்கள் சரியான வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. ஒப்பந்ததாரர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னைச்சையாக செயல்படுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதையெல்லாம் ஒழித்து விடுவோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் இன்னும் செயல்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இதை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.