ETV Bharat / city

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை - Mano thangaraj requests to centre given more funds to Tamil Nadu

ஒன்றிய அரசு தாராள மனப்பான்மையோடு தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி வழங்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்
author img

By

Published : Nov 21, 2021, 10:16 PM IST

சென்னை : மதுரை இளங்க-வின் 75ஆவது பவள விழா முன்னிட்டு சிறப்பு மலர் மற்றும் புதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலய விழா அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “கன்னியாகுமரி மாவட்டத்தில் குறுகிய காலகட்டத்தில் மூன்று முறை பெரிய மழை பெய்து வெள்ள பாதிப்பானது இந்த முறை மிக அதிகமாக உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் போதியளவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெரியளவில் எதுவும் ஏற்படவில்லை. பல இடங்களில் அழிவு என்பது பெரியளவில் ஏற்பட்டு உள்ளது.

குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் போன்றவை உடைந்து மிக பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒன்றிய குழு வருகிறது, இழப்பீடு குறித்த அறிக்கையை நாங்கள் அவர்களிடம் கொடுக்க உள்ளோம். ஏற்கனவே முதலமைச்சரிடம் ஒரு விரிவான அறிக்கையை கொடுத்துள்ளோம்.
ஒன்றிய குழு இரன்டு மணி நேரம் தான் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள நேரம் ஒத்துகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஒன்றிய அரசை கேட்டு கொள்வதெல்லாம் பேரிடர் காலகட்டத்தில் தாராள மனப்பான்மையோடு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நிதியை நிச்சயம் ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 10ஆண்டு காலமாக ஆக்கிரமிப்புகள் நிறைய நடந்துள்ளன. நீர்நிலைகள் எல்லாம் கொள்ளளவு குறைந்து காணப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே நாம் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் மூலமாக அதிக அளவில் நிதி வழங்கி வருகிறோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து நாம் வாங்க மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

Mano thangaraj requests to centre given more funds to Tamil Nadu
மதுரை இளங்க-வின் 75ஆவது பவள விழா முன்னிட்டு சிறப்பு மலர் மற்றும் புதிய நூல்களை வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்த முறை தமிழ்நாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அதிக நிதி வழங்க வேண்டும் என்று நான் ஆணித்தனமான கோரிக்கையை வைக்கிறேன். நீர் ஆதாரங்களை பாதுகாக்காததும் நீர் வழி தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தற்போதுள்ள பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் என்பது நிதர்சனமான உண்மை.

கடந்த 10ஆண்டுகள் அரசு சரியான முறையில் செயல்படாத காரணத்தினால் இன்று பொதுப்பணி துறை தகர்ந்து போய் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த நாங்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாடநூல் கழக தலைவர் லியோனி, “தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு SCRT என்ற ஒரு அமைப்பு உள்ளது. ஏற்கனவே பாடத்திட்டத்தில் உளவியல் என்ற பாடப்பகுதி உள்ளது.

பாடத்திட்டத்தில் உளவியல் பகுதியை சேர்த்து உளவியல் படிப்பவர்களை ஆசிரியர்களாக நியமித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒவவொரு பள்ளியிலும் கவுன்சிலர் என்ற ஒரு பொறுப்பை கொடுத்து மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட கூடிய கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதற்கு கவுன்சலிங் என்ற ஒரு வகுப்பை தனிப்பட்ட முறையில் கல்வி அமைச்சர் மூலமாகவும், முதலமைச்சர் மூலமாகவும் தெரிவித்து உள்ளோம். SCRT அமைப்போடு கலந்து ஆலோசதித்து அதற்கான முடிவை விரைவில் எடுப்பார்கள்” என்றார்.

இதையும் படிங்க : ‘பாடநூல் கழகத்தில் தீ விபத்து பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்’ - லியோனி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.