ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக! - இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்ற மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கைவிடுத்துள்ளார்.

protest
protest
author img

By

Published : Dec 27, 2019, 10:00 PM IST

சென்னையை அடுத்த தாம்பரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துவிட்டனர். மேற்கு வங்க, கேரள முதல்வர்களும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தங்கள் மாநிலத்தில் நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசும் வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த மாட்டோம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டார்.

குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியேந்தி போராட்டம்!

Intro:சட்டமன்ற கூட்ட தொடரில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்
தமிழக அரசிற்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை.
Body:சட்டமன்ற கூட்ட தொடரில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்
தமிழக அரசிற்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் ஆண்கள்,பெண்கள்,
சிறுவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியுடன் பேரணியாக சென்று மாபெரும் கண்டன ஆரபாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில் கூறுகையில்..

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டனர்
மேற்கு வங்கம் கேரள முதல்வர்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தங்கள் மாநிலத்தில் நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்..

குடியுரிமை சட்ட திருத்தம் வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்
தமிழக அரசு வருகின்ற சட்ட மன்ற கூட்ட தொடரில். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த மாட்டோம் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்பதை தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என இவ்வாறு கூறுகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.