கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் இளைஞர்கள் சிலர் மீண்டும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூலால் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் சென்னை முழுவதும் மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்கள் மற்றும் விற்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என கூறி காவல் துறை முக்கிய இடங்களில் போலீசார் செல்போன் எண்களுடன் விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் உயரமான கோபுரங்கள் மீது பைனாகுலர் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் பட்டம் விடுவோர்களை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு மாம்பலம் பகுதியில் அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் மாஞ்சா நூல் விற்பதாக குமரன் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் வைத்து மாஞ்சா நூல் விற்பனை செய்து வந்த சுஜித்( 21) என்ற இளைஞரை கைது செய்தனர்.
மாஞ்சா நூல் விற்பனை: இளைஞர் கைது - மாஞ்சா நூல் தயாரித்த சென்னை இளைஞர் கைது
சென்னை: வீட்டில் மாஞ்சா நூல் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.