ETV Bharat / city

2 கோடி செலவில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் மேலாண்மைப் பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் தகுதியான நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசாணை பிறப்பித்துள்ளது.

author img

By

Published : Nov 26, 2021, 8:10 PM IST

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான தொழில் மேலாண்மைப் பயிற்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ”ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

"ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவு ஏற்படுத்தி தரும் வகையில் கடன் பெற 5,000 தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாவட்ட அளவில் ஏழு நாள்கள் தொழில் மேலாண்மை பயிற்சிகள் தகுதியான நிறுவனங்கள் மூலம் இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அதன்படி, ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 4,500 தொழில் முனைவோர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 500 தொழில் முனைவோர் உள்ளிட்ட, 5000 தொழில் முனைவோரை தேர்வு செய்து, ஒரு தொழில் முனைவோருக்கு 4,000 ரூபாய் வீதம் (பயிற்சி நிறுவனத்திற்கு 3400 ரூபாய், தொழில் முனைவோருக்கு உதவித்தொகை 500 ரூபாய்),5000 தொழில் முனைவோருக்கு இரண்டு கோடி ரூபாய் செலவில் தாட்கோ மூலம் தொழில் மேலாண்மைப் பயிற்சி அளிக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை
அரசாணை

இதையும் படிங்க: Share market today: சந்தையில் பெரும் சரிவு - சுமார் 4.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.