சென்னை: தீங்கு விளைவிக்கும் & இதர கழிவுகள் விதிகள் 2016-இன் கீழுள்ள பிரிவுகளின் அடிப்படையில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மேலாண்மை செய்யப்பட்டு வருவதாகவும், 2020-2021-ம் ஆண்டில் உற்பத்தியான 7.95 லட்சம் டன் தீங்கு விளைவிக்கும் கழிவுகளில், 0.85 லட்சம் டன் ( 10.69% ) கழிவுகள் நிலத்தில் பாதுகாப்பாக கொட்டப்படக்கூடிய கழிவுகளாகவும் உள்ளது.
மேலும் 1.24 லட்சம் டன் ( 15.59% ) கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுபவையாகவும், 5.76 லட்சம் டன் ( 72.52% ) கழிவுகள் பயன்படுத்தக் கூடியவையாகவும், 0.095 லட்சம் டன் ( 1.19% ) கழிவுகள் எரிப்பான் மூலம் எரிக்கப்படுபவையாகவும் அமைந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி விஞ்ஞான முறையில் பாதுகாப்பாக கையாள்வதற்கு தகுந்த மேலாண்மை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்த 53 நெகிழி தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு வாரியத்தால் மூடப்பட்டுள்ளன.
ஜனவரி 2019 முதல் மார்ச் 2022 வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் மாநிலம் முழுவதும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு 1682 தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1041 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரை, சென்னையில் தட்ப வெப்பநிலையைத் தாங்கும் பசுமை கோயில்கள் - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்