ETV Bharat / city

மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் - Chennai Crime News

சென்னையில் கடன் தொல்லை காரணமாக மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி, இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தறுப்பு
மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தறுப்பு
author img

By

Published : May 28, 2022, 12:29 PM IST

Updated : May 28, 2022, 12:35 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(42), காயத்ரி(39) தம்பதி. இவர்களுக்கு நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன்(8) என இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காயத்ரி நாட்டு மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக பிரகாஷுக்கு கடன் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அவருக்கு மனைவியுடன் சச்சரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (மே 27) மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் மரம் அறுக்கும் ரம்பத்தால், அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சங்கர் நகர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நால்வரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட தகவலில் கடன் பிரச்சினை காரணமாகவே மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தலித் பெண் கொலை: திருடிய நகையை அடகு வைத்து ஒடிசாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள் - விசாரணையில் அம்பலம்

Last Updated : May 28, 2022, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.