சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலை இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், நேற்றிரவு (ஆக.20) மர்மநபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நபர் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தின் டிசர்ட்டை அணிந்திருந்ததாக தெரிகிறது. மர்மநபரின் இந்த கொள்ளை முயற்சியை எடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் மும்பையில் உள்ள தனியார் வங்கி நிறுவன ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்த்தனர். அப்போது அந்த மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் என தெரியவந்தது. பின்னர் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த மர்மநபர்... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை... - சிசிடிவி காட்சிகள்
சென்னை வளசரவாக்கத்தில் மர்மநபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.