ETV Bharat / city

மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்தவர் கைது
மோசடி செய்தவர் கைது
author img

By

Published : May 23, 2022, 8:15 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், சென்னை, புரசைவாக்கம், பிரிக்லின் ரோட்டை சேர்ந்த பரசுராமன் மகன்களான அசோக்குமார், ஜோதிக்குமார் ஆகியோர் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் Hindustan Scouts and Guides என்ற நிறுவனத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மற்றும் கமிஷனர் எனக் கூறிக்கொண்டு வந்துள்ளனர். பல படித்த இளைஞர்களை ஏமாற்றி Hindustan Scouts and Guides இல் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகச் சொல்லி தன்னிடமும் மற்றும் தன்னைப் போன்று பல நபர்களிடம் ரூபாய் 2 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்துள்ளனர்.

குறிப்பாக வங்கி கணக்கு மூலமாகவும் மற்றும் நேரடியாக அண்ணாநகரில் வைத்திருக்கும் அவர்கள் அலுவலகத்தில் வைத்து பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை கொடுத்து வந்துள்ளனர். பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் மேற்கொண்ட புலன் விசாரணையில், ஜோதிகுமார் மற்றும் அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கொண்டு அண்ணாநகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் அசோக் மேன் பவர் கன்சல்டன்சி என்கின்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. ரயில்வேதுறை, Food Corporation of India போன்ற மத்திய அரசு துறைகளில் எதிரி ஜோதிகுமார், அசோக்குமார் நடத்தி வரும் மேற்படி கன்சல்டன்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல் போலி ஒப்பந்தத்தை அரசு முத்திரைகளை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். வேலை தேடும் அப்பாவி நபர்களிடம் காண்பித்து பல துறைகளில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

இதனையடுத்து ஜோதிகுமார் (34) என்பவர் 18.05.2022 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கைதின்போது குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன்கள், வெர்னா கார் மற்றும் பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய அசோக் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டல்: நபர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.