மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. அதன் பிறகு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடக்கவுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அவரை திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் மம்தா பானர்ஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மம்தாவுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து திருவள்ளுவர் சிலையை பரிசளித்து அவர் வரவேற்றார். பதிலுக்கு மம்தாவும் ஸ்டாலினுக்கு பரிசு அளித்து கவுரவித்தார்.