ETV Bharat / city

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு: முன் பிணை கோரியுள்ள  நிதித்துறை உதவியாளர்! - முன்ஜாமீன் கோரி மனு

சென்னை: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன்பிணைக் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் தாக்கல் செய்த மனு தொடர்பில் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Malpractice in tnpsc group 2, officer kavitha move AB petition
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு : முன்ஜாமீன் கோரியுள்ள  நிதித்துறை உதவியாளர்!
author img

By

Published : Feb 6, 2020, 8:53 PM IST

தமிழ்நாடு அரசின் 41 துறைகளில் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்த 1953 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகார்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், அந்தப் புகார்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாத சூழலில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் புகார் செய்தனர்.

இதன் அடிப்படையில் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள், தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 16 அரசு ஊழியர்களைக் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடும் என முன் பிணை கேட்டு, தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வரும் கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குரூப் 2 ஏ தேர்வு எழுதியதாகவும், தன்னுடன் தேர்வு எழுதிய விக்னேஷ், சுதா மற்றும் சுதா தேவி ஆகியோரை கைது செய்துள்ளதைப் போல சிபிசிஐடி காவல்துறையினர் தன்னையும் கைது செய்யக்கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி தான் ஆண் குழந்தையை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பில் உள்ளதாகவும், அதனால் ஆதாரங்கள் எதையும் கலைக்க வாய்ப்பில்லை என்பதால் தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து விளக்கமளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Malpractice in tnpsc group 2, officer kavitha move AB petition
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கு : முன் பிணை கோரியுள்ள நிதித்துறை உதவியாளர்!

தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊடகங்களிடம் பேசத் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

Intro:Body:குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 13ம் தேதி விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி, பலரை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடும் என முன்ஜாமீன் கேட்டு, தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குரூப் 2 ஏ தேர்வு எழுதியதாகவும், தன்னுடன் தேர்வு எழுதிய விக்னேஷ், சுதா மற்றும் சுதா தேவி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதைப் போல தன்னையும் கைது செய்யக்கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 23ம் தான் ஆண் குழந்தையை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பில் உள்ளதாகவும், அதனால் ஆதாரங்கள் எதையும் கலைக்க வாய்ப்பில்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து விளக்கமளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.