மதுரை: சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, கூட்டநெரிசலில் சிக்கி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (47), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி(62) இருவரும் உயிரிழந்தனர். 7 பேர் காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையும் படிங்க:வெண்பட்டு பச்சை அங்கி அணிந்து, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்!