ETV Bharat / city

'உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளி சென்னை...!'

author img

By

Published : Oct 15, 2019, 7:53 PM IST

Updated : Oct 16, 2019, 5:25 AM IST

சென்னை: உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக சென்னை மாறிவருகிறது என்று கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளின் தொழில் துறை தூதுவர் முகோபாத்யாய் கூறினார்.

Chennai Economic Conference

வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டம்

மத்திய அரசின் வர்த்தகத் துறை மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து இந்தியா- கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் (CLMV) ஆகிய நாட்டு வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தொழில் துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த வரலாற்று உறவு, பண்பாடு, கலாசார உறவு ஆகியவை குறித்தும், தற்காலத்தில் இணைந்து வர்த்தகம் செய்வதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வர்த்தக மையப்புள்ளி

நிகழ்ச்சியில் பேசிய கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளின் தொழில்துறை தூதுவர் முகோபாத்யாய், "உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக தற்போது சென்னை மாறிவருகிறது. இன்றைய சூழலில் உலக நாட்டுத் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் சுயநலத்துடன் செயல்படுகின்றனர்.

வர்த்தகப் போர்

அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் மூலம் நமது நாடுகள் பயன்பெற முடியும். கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளிலிருந்து மூலப்பொருள்களை வாங்கிச் சென்று மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்துவருகிறது சீனா. இதனை மாற்றும் வகையில் எங்கள் நாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.

உறவுகள் புதுப்பிப்பு

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு தொழில் துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், "பண்டைய வர்த்தக உறவுகளை புதுப்பிக்க வேண்டும். இந்தியாவின் முன்னோடி தொழில் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இதையும் படிங்க: இந்திய ரூபாய் 28 காசுகள் உயர்வு

தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம். மின்மிகை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் போதிய அளவுக்கு திறன்வாய்ந்த மனித வளம் உள்ளது.

தொழில் தொடங்க சாத்தியம்

விமான நிலையம், துறைமுகம் என தேவையான போக்குவரத்து வசதி உள்ளது. இது தவிர தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர அனுமதி, எளிமையான அனுமதி நடைமுறைகள் என தொழில் தொடங்குவதற்கு ஏற்புடைய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது" என்றார்.

சென்னையில் நடந்த வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நிறுவனங்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்குவது பற்றியும் இந்திய நிறுவனங்கள் அங்கு வணிகம் செய்யும் சாத்தியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘விலையேற்றம் கண்ட மலர்கள்... குஷியான விவசாயிகள்’

Intro:சென்னை:
சீன அமெரிக்க வர்த்தக போரால் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.Body:மத்திய அரசின் வர்த்தகத்துறை மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து இந்தியா- கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் (CLMV) ஆகிய நாட்டு வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழக பிரிவு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்து வரலாற்று உறவு, பன்பாட்டு, கலாச்சார உறவு ஆகியவை குறித்தும், தற்காலத்தில் இணைந்து வர்த்தகம் செய்வதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளின் தொழில்துறை தூதர் முகோப்பாத்தியாய், "உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக தற்போது சென்னை மாறி வருகிறது. இன்றைய சூழலில் உலக நாடுத் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். அமெரிக்க சீனா வர்த்தகப் போர் மூலம் நமது நாடுகள் பயன்பெற முடியும். கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை வாங்கிச் சென்று மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்து வருகிறது சீனா. இதனை மாற்றும் வகையில் எங்கள் நாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்" என அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், "பன்டைய வர்த்தக உறவுகளை புதுப்பிக்க வேண்டும். இந்தியாவின் முன்னோடி தொழில் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியைவிட அதிகம். மின் மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் போதிய அளவுக்கு திறன்வாய்ந்த மனித வளம் உள்ளது. விமான நிலையம், துறைமுகம் என தேவையான போக்குவரத்து வசதி உள்ளது. இது தவிர தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி, எளிமையான அனுமதி நடைமுறைகள் என தொழில் தொடங்குவதற்கு ஏற்புடைய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது" என்றார். இந்த கூட்டத்தில் கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நிறுவனங்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு தொழில் தொடங்குவது பற்றியும் இந்திய நிறுவனங்கள் அங்கு வணிகம் செய்யும் சாத்தியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Conclusion:visual via mojo
Last Updated : Oct 16, 2019, 5:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.