சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான முன் வேலை வாய்ப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 227 பேருக்கு முன்வேலை வாய்ப்பிற்கான அனுமதி உத்தரவை பெற்றனர். ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் 186 மாணவர்களும், 2019-20 ஆம் ஆண்டில் 170 மாணவர்களும் வேலை வாய்ப்பிற்கான முன் அனுமதி உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
2018-19இல் ஒட்டுமொத்த கல்வியாண்டில் 135 மாணவர்களே முன் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட முன் வேலை வாய்ப்பு முகாமின் மூலம் கடந்த 2015-16ஆம் ஆண்டில் 69 மாணவர்களும், 2016-17 இல் 73 மாணவர்களும், 2017-18இல் 114 மாணவர்களும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் 60 விழுக்காடும், நிதி மற்றும் ஆலோசனைத்துறையில் 23 விழுக்காடும், பொது மக்கள் அதிகம் விரும்பும் பொருட்கள் விற்பனைத்துறையில் 5 விழுக்காடும், தொழில்நுட்பத்துறையில் 12 விழுக்காடும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடு; பணியிலிருந்து விலகிய உதவிப் பேராசிரியர்!