ETV Bharat / city

மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு ஏன்? - நீதிமன்றம் அளித்த விளக்கம் - 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
author img

By

Published : Apr 8, 2022, 12:52 PM IST

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு நேற்று (ஏப்ரல் 7) தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி மாநில அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மாநில அரசு, ஆணையம் அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.46,686 ஆக உள்ளது. அதே சமயம் சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4,68,413 ஆகவும், ஐசிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4,77,263 ஆகவும் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களைப் பொருத்தமட்டில் 83 விழுக்காடு தந்தையர்களும், 65 விழுக்காடு தாயாரும் தினக்கூலி பணியாளர்கள். சமத்துவத்தை தீர்மானிக்கும் போது இந்த அம்சங்களை ஒதுக்கிவிட முடியாது.

பள்ளிகள் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துவது காரணமற்றது எனக்கூறி விட முடியாது. சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள், தடைகளை தாண்டி வர ஏதுவாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது அல்ல. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அந்த இட ஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்கவில்லை. அதேநேரம் அனைத்து பிரிவிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த பலன் சென்றடையும்" என்றனர்.

நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஆணையத்தின் பரிந்துரைப்படி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த இடஒதுக்கீட்டைத் தொடராத வகையில் இடைப்பட்ட காலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் வனப்பகுதி சாலைக்கு தடைக்கோரிய வழக்கு - ஏப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.