ETV Bharat / city

ரூ.600 கோடி வங்கி மோசடி வழக்கு; சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Jul 9, 2019, 10:37 PM IST

Updated : Jul 10, 2019, 8:15 AM IST

சென்னை: லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து தொழிலதிபர் சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court

ஐடிபிஐ வங்கி எனும் இந்திய தொழில் மேம்பாடு வங்கியில், பின்லாந்தை சேர்ந்த வின்வின்ட் ஓய் மற்றும் ஆக்சஸ் சன்சைன் நிறுவனங்கள் முறையே ரூ.393 கோடி மற்றும் ரூ.530 கோடி கடன் பெற்றுள்ளன. இதில் ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பிரவீன் சின்கா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சிபிஐ, தொழிலதிபர் சிவசங்கரன், வங்கி மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

இது தவிர சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக தனக்கு எதிராக சிபிஐயும், அமலாக்க துறையும் பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சிவசங்கரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவு அலுவலர்கள் அனுப்பிய சம்மன் நாட்களில், நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகவோ, தலைவராகவோ பதவி வகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Intro:Body:ரூ.600 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து தொழிலதிபர் சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கி எனும் இந்திய தொழில் மேம்பாடு வங்கியில், பின்லாந்தை சேர்ந்த வின்வின்ட் ஓய் மற்றும் ஆக்சஸ் சன்சைன் நிறுவனங்கள் முறையே ரூபாய் 393 கோடி மற்றும் 530 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன.

இதில் 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பிரவீன் சின்கா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சிபிஐ, தொழிலதிபர் சிவசங்கரன், வங்கி மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகள் தொடர்பாக தனக்கு எதிராக சிபிஐ-யும், அமலாக்க துறையும் பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி தொழிலதிபர் சிவசங்கரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அனுப்பிய சம்மன் நாட்களில், நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் அந்த நிறுவனத்தின் இயக்குனராகவோ, தலைவராகவோ பதவி வகிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
Conclusion:
Last Updated : Jul 10, 2019, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.