ETV Bharat / city

சிவனடியார் தற்கொலை வழக்கு - மாவட்ட எஸ்.பி. கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

காவல்துறை தாக்கியதில் மனமுடைந்து, சிவனடியார் சரவணன் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சேலம் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 15, 2020, 7:43 PM IST

madras-high-court
madras-high-court

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குண்டாங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்; சிவனடியார். இவர் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இத்தற்கொலை தொடர்பாக தேவூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னுடைய தற்கொலை முடிவுக்கு தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தான் காரணம் என்றும், அவர் தன்னை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து துன்புறுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவு ஒன்றை தற்கொலை செய்வதற்கு முன் சரவணன் வெளியிட்டிருந்தார்.

சரவணன் தற்கொலை வழக்கு விசாரணையை தேவூர் காவல் நிலையம் நடத்தினால் நியாயமான விசாரணை நடக்காது என்பதால் சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு இந்து மக்கள் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிவனடியார் சரவணன் மரணத்தில் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த புகாரும் வரவில்லை. சரவணனின் மரணம் குறித்து அவர் மனைவி சாந்தி அளித்த புகாரில் மட்டுமே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிவனடியார் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையே தேவூர் காவல் துறையே தொடரலாம் என்றும், அந்த விசாரணையில் சிவனடியாரின் வீடியோ பதிவையும் ஒரு ஆவணமாக கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் விசாரணையை விரைந்து நடத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

தேவூர் காவல் நிலைய ஆய்வாளர் நடத்தும் விசாரணையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.