சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு, மோதல், மத கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் குண்டர் சட்டம் பதியப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி நக்கீரன் அமர்வில் இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கை வசதி