ETV Bharat / city

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது - 8பேர் கைது

சென்னை: மதுரவாயலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் எட்டு பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்தனர்.

8பேர் கைது
author img

By

Published : Jul 9, 2019, 7:37 AM IST

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாயுடு (என்ற) வெங்கடேஷ்(28). இவரது நண்பர் பாலச்சுந்தர்(27). இருவரும் ஆலப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகே நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் வெங்கடேசை சரமாரியாக வெட்டியது.

இதைத் தடுக்க முயன்ற பாலச்சுந்தருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர், சிறு காயங்களுடன் பாலசுந்தர் தப்பிச் சென்று விட்டார். வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலையாளிகள் திண்டிவனத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை காவலர்கள் அங்கு விரைந்து, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25), மணிகண்டன்(26), சங்கர்(26), பணப் பாண்டி(26), திவாகர்(21), தினேஷ்(22), முரளி கிருஷ்ணன்(27), சரன்ராஜ்(27) ஆகிய எட்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொலை செய்யப்பட்ட வெங்கடேஷுக்கும், அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் சிறு மோதல் இருந்து வந்துள்ளது, இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு வெங்கடேசை வெட்டியுள்ளனர். அதில், அவர் பிழைத்து கொண்டார். அதன்பின், வெங்கடேஷ் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

முன் விரோதக் காரணமாக இளைஞர் வெட்டி கொலை; 8பேர் கைது

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை வந்தவர். அந்த இளைஞர்களை கொலை செய்வதாக வெங்கசேஷ் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த எட்டு பேரும், வெங்கடேசை கொலை செய்ததாக, வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.

Intro:மதுரவாயலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது. முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டிய அம்பலம்.

Body:மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாயுடு (என்ற) வெங்கடேஷ்(28), இவரது நண்பர் பாலச்சுந்தர்(27), இருவரும் நேற்று ஆலப்பாக்கம், ஏகாம்பரம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் வெங்கடேசை சரமாரியாக வெட்டினார்கள் தடுக்க வந்த பாலச்சுந்தருக்கும் வெட்டு விழுந்தது. இதையடுத்து பாலசுந்தர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. வெட்டுக்காயமடைந்த பாலச்சுந்தர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகளை அமைத்து கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை தேடி வந்தனர் இதையடுத்து கொலையாளிகள் திண்டிவனத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன்(25), மணிகண்டன்(26), சங்கர்(26), பணப் பாண்டி(26), திவாகர்(21), தினேஷ்(22), முரளி கிருஷ்ணன்(27), சரன்ராஜ்(27),
உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்Conclusion:விசாரணையில் :
கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் அந்த பகுதியில் உள்ள வாலிபர்களை மிரட்டி வந்துள்ளார் மேலும் பார்க்கும்போதெல்லாம் அவர்களை தீர்த்துக்கட்டி விடுவதாக கூறி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது இதனால் கடந்த 2017 ம் ஆண்டு வெங்கடேசை வெட்டியுள்ளனர் அப்போது அவர் பிழைத்து கொண்டார். இதையடுத்து வெங்கடேஷ் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார். இங்கு வரும்போதெல்லாம் மீண்டும் இவர்களை மிரட்டி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர் இவர்களுக்கு போன் செய்துள்ளார் நான் சென்னை வருகிறேன் யார் சாகப்போகிறீர்கள் என தெரியாது என தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன 8 பேரும் வெங்கடேசை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நேற்று முன்தினம் வெங்கடேசை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 3 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.