சென்னை: கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெய்நிகர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலைய துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்து மேடையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "நான் கைராசி காரனல்ல. நான் உழைப்பினை நம்புகிறவன்.
கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 2000 பேர் கலந்துகொள்வர்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 4000 பேர் கலந்துகொண்டனர். அதில் 1000 பேருக்கு வேலை உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அதில் 100 பேருக்கு வேலைவாய்ப்பிற்கான ஆணையை வழங்க உள்ளேன்" எனக் கூறினார்.