ETV Bharat / city

பெண் ஊழியர் பணிநீக்கம்! - ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரிக்கு ஆணை! - பொய் புகாரில் பெண் ஊழியர் பணிநீக்கம்

சென்னை: போலி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

college
college
author img

By

Published : Dec 29, 2020, 6:22 PM IST

சென்னை லயோலா கல்லூரியில், லயோலா மேம்பாட்டு அலுவலகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் உள்ளது. இதை நிர்வகிக்க கடந்த 2010 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் மாணவர் சங்கத்துக்கு வந்த 1 கோடி ரூபாயை, அப்போதைய இயக்குநர் முறைகேடாக பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு பெண் ஊழியர் புகார் அளித்தார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பெண் ஊழியரை இடைநீக்கம் செய்ததுடன், ஊதியமும் நிறுத்தப்பட்டது.

மேலும், பெண் ஊழியரின் கல்விச் சான்றிதழை தராமல் அலைக்கழித்ததுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணைக்கை எடுத்தது. ஆணையத்தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமையிலான குழு, கடந்த நவம்பர் மாதம் கல்லூரி நிர்வாகத்திடமும், டிசம்பர் 15 ஆம் தேதி கல்லூரியிலும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ஊழியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆணையத்தலைவர் கண்ணகி பாக்கியநாதன் பிறப்பித்த உத்தரவில், ” கல்லூரி ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டால், கல்லூரி கல்வி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. பெண் ஊழியர் விவகாரத்தில் இது கடைபிடிக்கப்படவில்லை. இதிலிருந்தே பெண் ஊழியர் உரிய காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதனால் அவருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதன்படி 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நிலுவையில் உள்ள ஊதியம் 24.3 லட்ச ரூபாய், மன உளைச்சல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்காக 25 லட்ச ரூபாய், தவறான குற்றச்சாட்டுக்கு 15 லட்ச ரூபாய் என, 64.3 லட்ச ரூபாயை இழப்பீடாக கல்லூரி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் ” என உத்தரவிட்டார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் சூதாட்டம் விளையாடிய உதவி ஆய்வாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.