சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே காதலாக மாறியுள்ளது. காதலின் காரணமாக அந்த பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ருமேஸ் அகமதுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால் ருமேஸ் அகமது அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பிய நிலையில், கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். மேலும் 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு, ருமேஷ் அகமது மற்றும் அவரது தந்தை வற்புறுத்தலின் பேரில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். மேலும் கருக்கலைப்பு செய்த பின் ருமேஸ் அகமது உடனான காதலில் அந்தப் பெண் மீண்டும் கருவுற்று இருக்கிறார்.
இதனால் இந்தமுறையும் கருவை கலைத்து விட வேண்டும் என சொல்ல இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது எழும்பூர், மாண்டியத் தெருவில் தங்கியுள்ள அந்த பெண், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி துபாயில் இருந்து அழைத்து வந்து ஏமாற்றுவதாக ருமேஸ் அகமது மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள ருமேஸ் அகமதுவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.
இதையும் படியுங்க:
'2 லட்சம் ரூபாய் தந்தால்தான் இந்தியா திரும்ப முடியும்' - கும்பலிடம் சிக்கித் தவிக்கும் ஏழைப்பெண்!