சென்னை: தாம்பரம் அடுத்த சானிடோரியம் மேம்பாலம் அருகில் வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து ஜானகிராமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்த நிலையில் தாம்பரம் துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி, உதவி ஆணையாளர் சீனிவாசன் உட்பட ஆறு பேர் கொண்ட காவல்துறை குழுவினர் சானிடோரியத்திற்கு சென்றனர்.
ஆனால் காவல்துறையினர் சானிடோரியம் பகுதிக்கு வருவதை அறிந்த கும்பல் வீட்டை பூட்டிவிட்டு தப்பிச் சென்றது.
இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் மேலும் ஒருவர் விசாரணைக்காக தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் தப்பி சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: மூதாட்டியைக் கொன்று 20 சவரன் நகைகள் கொள்ளை - இருவர் கைது!