சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகள் பவதாரணி (18). தனது தந்தையுடன் ஆடை வாங்குவதற்காக எம்.சி. ரோடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் எதிரே வந்த தண்ணீர் லாரி, சாலை ஓரத்தில் நடந்துசென்ற அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயங்களுடன் பவதாரணியும் அவரின் தந்தையும் ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் சிகிச்சைப் பலனின்றி பவதாரணி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுக் காவல் துறையினர், குடிநீர் லாரி ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.